திருப்பல்லாண்டு | Thiruppallandu | பெருமாள் பாசுரம் Lyrics Tamil


பாசுரம் | பெருமாள் பாடல்
Pasuram | Perumal Song

திருப்பல்லாண்டு
Thiruppallandu


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனமுடையீர்கள் வரம்பு ஒழிவந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோநாராயணாய என்று
பாடும் மனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாண்டு கூறுமினே.

அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே.

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்று பாடுதமே.

தீயின் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி
பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்துக் கலத்தது உண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்ததுகாண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலை பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே.

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்
பல்வகையால் நமோநாராயணா என்று நாமம் பல பரவி
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே.

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே

விவரம்Detail தமிழ்English
🙏 தெய்வம்🙏 Deity பெருமாள்Perumal
🎵 வகை🎵 Category பாசுரம்Pasuram

📱 முழு பாடல் தொகுப்பிற்கு ஆப் டவுன்லோட் செய்யுங்கள்!
📱 Download App for Full Song Collection!


ஆப் டவுன்லோட் செய்க →
Download App →

🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com

இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.

🌐 www.tamilstarcalendar.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *