🕉️
ஐயப்பன் 108 சரண கோஷம்
Ayyappa 108 Sarana Gosham
ஐயப்பன் மந்திரம்
Ayyappan Mantra
📿 மந்திர வரிகள்
📿 Mantra Text
1. ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
2. ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
3. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
4. ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
5. ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
6. ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
7. ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
8. ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
9. ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா
10. ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
11. ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
12. ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
13. ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
14. ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
15. ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
16. ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
17. ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
18. ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
19. ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
20. ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா
21. ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
22. ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
23. ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
24. ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
25. ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
26. ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
27. ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
28. ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
29. ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
30. ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா
31. ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
32. ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
33. ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
34. ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
35. ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
36. ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
37. ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
38. ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
39. ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
40. ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா
41. ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
42. ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
43. ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
44. ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
45. ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
46. ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
47. ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
48. ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
49. ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
50. ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
51. ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
52. ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
53. ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
54. ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
55. ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
56. ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
57. ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
58. ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
59. ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
60. ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
61. ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
62. ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
63. ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
64. ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
65. ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா
66. ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
67. ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
68. ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
69. ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
70. ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
71. ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
72. ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
73. ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
74. ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
75. ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா
76. ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
77. ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
78. ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா
79. ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
80. ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
81. ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
82. ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
83. ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
84. ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
85. ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
86. ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
87. ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
88. ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
89. ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
90. ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
91. ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
92. ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
93. ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
94. ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
95. ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா
96. ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
97. ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
98. ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
99. ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
100. ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
101. ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
102. ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
103. ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
104. ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
105. ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா
106. ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
107. ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா
🔤 Transliteration
1. Om Kannimoola Ganapathiye Saranam Ayyappa
2. Om Kanthamalai Jothiye Saranam Ayyappa
3. Om Harihara Suthane Saranam Ayyappa
4. Om Annadhana Prabhuve Saranam Ayyappa
5. Om Arumugan Sodharane Saranam Ayyappa
6. Om Aapathil Kaapponae Saranam Ayyappa
7. Om Inthamizh Suvaiye Saranam Ayyappa
8. Om Ichchai Thavirppavane Saranam Ayyappa
9. Om Eesanin Thirumagane Saranam Ayyappa
10. Om Unmai Paramporule Saranam Ayyappa
11. Om Ulagalum Kaavalaney Saranam Ayyappa
12. Om Oomaikkarul Purinthavane Saranam Ayyappa
13. Om Oozhvinai Azhappavane Saranam Ayyappa
14. Om Eliyorkku Arulpavane Saranam Ayyappa
15. Om Engal Kula Deivame Saranam Ayyappa
16. Om Ezhai Pangaalane Saranam Ayyappa
17. Om Ekanta Moorthiye Saranam Ayyappa
18. Om Aingaran Thambiye Saranam Ayyappa
19. Om Aiyamellam Theerppavane Saranam Ayyappa
20. Om Oppillatha Thirumaniye Saranam Ayyappa
21. Om Olirum Thiruvilakke Saranam Ayyappa
22. Om Ongara Paramporule Saranam Ayyappa
23. Om Odhum Maraiporule Saranam Ayyappa
24. Om Oladhangal Arulpavane Saranam Ayyappa
25. Om Sowbhagyam Alippavane Saranam Ayyappa
26. Om Kaliyuga Varadane Saranam Ayyappa
27. Om Sabarimalai Sasthave Saranam Ayyappa
28. Om Sivanmaal Thirumagane Saranam Ayyappa
29. Om Saiva Vaishnava Aikyame Saranam Ayyappa
30. Om Achankovil Arase Saranam Ayyappa
31. Om Ariyankavu Ayyave Saranam Ayyappa
32. Om Kulathupuzha Baalane Saranam Ayyappa
33. Om Ponnambala Vaasane Saranam Ayyappa
34. Om Villali Veerane Saranam Ayyappa
35. Om Veeramanikandane Saranam Ayyappa
36. Om Uthirathil Udhithavane Saranam Ayyappa
37. Om Uththamane Sathiyane Saranam Ayyappa
38. Om Pambayil Pirandhavane Saranam Ayyappa
39. Om Pandhala Maamaniye Saranam Ayyappa
40. Om Sakalakalai Vallone Saranam Ayyappa
…
📖 பொருள்
📖 Meaning
சபரிமலைக்கு மாலை அணிந்து மண்டல விரதமிருந்து யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஐயப்பனின் 108 சரண கோஷங்களை பக்தியுடன் பாராயணம் செய்வது வழக்கம். இதை மனமாரச் சொல்லி வழிபடுவதால் வாழ்க்கையில் ஆனந்தம், மன அமைதி மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
The 108 Sarana Gosham is a devotional chant offered to Lord Ayyapan by devotees, especially during the Mandala Vratham and Sabarimala pilgrimage season. Chanting these sacred praises with devotion is believed to bring peace, spiritual strength, and prosperity in life.
✨ பலன்கள்
✨ Benefits
ஐயப்பனின் 108 சரண கோஷங்களை பக்தியுடன் பாராயணம் செய்வதால் மன அமைதி, தைரியம், ஆன்மீக சக்தி, தடைகள் நீக்கம் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
Chanting 108 Sarana Gosham fills heart with devotion, removes all troubles and grants Swami Ayyapan's blessings.
📅 ஜப விவரங்கள்
📅 Chanting Guide
| விவரம்Detail | தமிழ்Value |
|---|---|
|
🗓️ சிறந்த நாள் 🗓️ Best Day |
சனிக்கிழமை, கார்த்திகை மாதம், மண்டல காலம் Saturday, Mandalam |
|
⏰ சிறந்த நேரம் ⏰ Best Time |
காலை மற்றும் மாலை பூஜை நேரம் Morning or Evening |
|
🔢 ஜப எண்ணிக்கை 🔢 Chant Count |
1 முறை அல்லது 108 முறை பக்தியுடன் |
🙏 ஐயப்பன் அருளால் இந்த மந்திரம் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும்.
🙏 May Ayyappan’s blessings be with you always.
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com