🕉️
முருகன் 108 போற்றி
Murugan 108 Potri
முருகர் மந்திரம்
Murugar Mantra
📿 மந்திர வரிகள்
📿 Mantra Text
1. ஓம் அழகா போற்றி
2. ஓம் அறிவே போற்றி
3. ஓம் அரன் மகனே போற்றி
4. ஓம் அயன்மால் மருகா போற்றி
5. ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
6. ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
7. ஓம் பன்னிருகை வேலவா போற்றி
8. ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
9. ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
10. ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
11. ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
12. ஓம் இடர் களைவோனே போற்றி
13. ஓம் உமையவள் மகனே போற்றி
14. ஓம் உலக நாயகனே போற்றி
15. ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
16. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
17. ஓம் ஓம்கார சொருபனே போற்றி
18. ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
19. ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
20. ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
21. ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
22. ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
23. ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
24. ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
25. ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
26. ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
27. ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
28. ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
29. ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
30. ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
31. ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
32. ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
33. ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
34. ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
35. ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
36. ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
37. ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
38. ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
39. ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
40. ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
41. ஓம் கருணாகரனே போற்றி
42. ஓம் கதிர் வேலவனே போற்றி
43. ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
44. ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
45. ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
46. ஓம் அறுபடை விடுடையவா போற்றி
47. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
48. ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
49. ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
50. ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
51. ஓம் மகா சேனனே போற்றி
52. ஓம் மயில் வாகனனே போற்றி
53. ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
54. ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
55. ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
56. ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி
57. ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
58. ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
59. ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
60. ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
61. ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
62. ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
63. ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
64. ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
65. ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
66. ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
67. ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
68. ஓம் சரவணபவ சண்முகா போற்றி
69. ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
70. ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
71. ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
72. ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
73. ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
74. ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
75. ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
76. ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
77. ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
78. ஓம் யோக சித்தியே அழகே போற்றி
79. ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
80. ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
81. ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி
82. ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
83. ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
84. ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
85. ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
86. ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
87. ஓம் நக்கீரர் கருள் நாயகா போற்றி
88. ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
89. ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
90. ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
91. ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
92. ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
93. ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
94. ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி
95. ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
96. ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி
97. ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
98. ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
99. ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
100. ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
101. ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
102. ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
103. ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
104. ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
105. ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
106. ஓம் திருப்புகழ் விருப்புடைத் தேவா போற்றி
107. ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி
108. ஓம் ஜெய ஜெய வேலவா போற்றி
🔤 Transliteration
1. Om Azhaga Potri
2. Om Arive Potri
3. Om Aran Magane Potri
4. Om Ayanmaal Maruga Potri
5. Om Sakthivelava Saravana Potri
6. Om Mukthi Arulum Muruga Potri
7. Om Pannirukai Velava Potri
8. Om Pavazha Vaai Sirippu Paalaga Potri
9. Om Aariru Thandothol Potri
10. Om Aarazhuthu Manthram Potri
11. Om Idumbanai Vendravane Potri
12. Om Idar Kalaivone Potri
13. Om Umaiyaval Magane Potri
14. Om Ulaga Nayagane Potri
15. Om Aiyane Potri Arule Potri
16. Om Aingaran Thambiye Potri
17. Om Omkara Sorubane Potri
18. Om Moolaporule Gugane Potri
19. Om Odhuvaarkku Iniyane Potri
20. Om Omgara Thul Valar Oliye Potri
21. Om Thiruvadi Thozhudhida Arulvaai Potri
22. Om Guruvadivana Guruvin Uruve Potri
23. Om Bakthargal Potrum Pazham Nee Potri
24. Om Sithargal Vasamaana Selvel Potri
25. Om Devargal Senai Thalaiva Potri
26. Om Devagunjari Manala Potri
27. Om Venniraneyum Visaga Potri
28. Om Kannin Maniye Kaniye Potri
29. Om Dhandapani Em Deivame Potri
30. Om Kundala Molirum Sundara Potri
31. Om Vedha Porule Venthe Potri
32. Om Arundhamizh Valartha Ayya Potri
33. Om Senthil Urayum Skandha Potri
34. Om Palani Pathivazh Paalaga Potri
35. Om Irulidar Pokkum Pagalava Potri
36. Om Inbamam Veedarul Iraiva Potri
37. Om Anbin Uruvame Emarase Potri
38. Om Avvaikku Aruliyavane Potri
39. Om Sentha Kurinchi Ventha Potri
40. Om Kandha Kadamba Karthikeya Potri
41. Om Karunagarane Potri
42. Om Kathir Velavane Potri
43. Om Moolaporule Muruga Potri
44. Om Sooranukku Aruliya Senapathiye Potri
45. Om Kundru Thoradum Kumara Potri
46. Om Arupadaividudaiyava Potri
47. Om Karthigai Mainthane Potri
48. Om Kandhasashti Nayaga Potri
49. Om Idhaya Kovilil Iruppaai Potri
50. Om Bakthartham Pagai Ozhippavane Potri
51. Om Maha Senane Potri
52. Om Mayil Vaaganane Potri
53. Om Vadiveludane Varuvaai Potri
54. Om Adiyaar Thuyaram Kalaivaai Potri
55. Om Valamaana Vaazhvu Tharuvaai Potri
56. Om Valli Deivanai Manala Potri
57. Om Senjudar Meni Sevvel Potri
58. Om Malaimagat Kilaiya Magane Potri
59. Om Amirtham Thamizhin Thalaivar Potri
60. Om Thamizhar Tham Karunai Migu Iraiva Potri
61. Om Aadum Ayilvel Arase Potri
62. Om Vandharul Sei Vadivelava Potri
63. Om Kaliyuga Varadha Kandha Potri
64. Om Kavalaik Kadalai Kalaivoy Potri
65. Om Thandhaikku Manthram Uraithava Potri
66. Om Endhanukku Irangi Arulvaai Potri
67. Om Saivam Valartha Sambanthaa Potri
68. Om Saravanabhava Shanmuga Potri
69. Om Vedar Tham Kodi Manala Potri
70. Om Vanathil Vedanaai Vandhaai Potri
71. Om Punathinil Andiyaai Vandhava Potri
72. Om Thenthinai Ma Neivethya Potri
73. Om Thevitta Inbame Thendrale Potri
74. Om Devathi Devane Deivame Potri
75. Om Bogar Naadhane Polive Potri
76. Om Potrap Paduvone Porule Potri
77. Om Punniya Moorthiye Varadha Potri
78. Om Yoga Sitthiye Azhage Potri
79. Om Palaniyandavane Paalaga Potri
80. Om Thenparang Kundrone Deva Potri
81. Om Karunaimozhi Porur Kandha Potri
82. Om Arunagirikkunbu Arulinai Potri
83. Om Kurinchi Nila Kadavule Potri
84. Om Kurumuni Thanakkrarul Guruve Potri
85. Om Thanigasalam Urai Shanmuga Potri
86. Om Sikkal Meviya Singara Potri
87. Om Nakkeerar Karul Nayaga Potri
88. Om Virali Malaiyuru Velava Potri
89. Om Thirukkazhuk Kundrin Selva Potri
90. Om Manamgamizh Kadamba Malaiyaai Potri
91. Om Kundrakkudi Amar Gugane Potri
92. Om Kumaraguru Pugazh Azhaga Potri
93. Om Kathir Kamatthurai Kadavule Potri
94. Om Thudhipuri Anben Thunaiye Potri
95. Om Palanip Pathivazh Panditha Potri
96. Om Senthur Pathivazh Sundara Potri
97. Om Marudhasala Moorthiye Magizhalve Potri
98. Om Kandhaasramam Nirai Kandha Potri
99. Om Pazhamudir Solai Pathiye Potri
100. Om Pathumalai Muthukumara Potri
101. Om Avvaiyin Painthamizh Kettava Potri
102. Om Arumaiyin Eliya Azhage Potri
103. Om Iru Mayil Manantha Ere Potri
104. Om Arulser Iruvinai Neekkuvaai Potri
105. Om Neengap Pugazhudai Nimala Potri
106. Om Thirupugazh Viruppudai Deva Potri
107. Om Arutperum Jothi Andava Potri
108. Om Jaya Jaya Velava Potri
📖 பொருள்
📖 Meaning
முருகனின் பல்வேறு திருநாமங்கள், திருத்தலங்கள், அருள், ஞானம், பக்தர்கள் மீதான கருணை ஆகியவற்றைப் போற்றிப் பாடும் 108 போற்றி தொகுப்பாகும்.
This is a devotional collection of 108 praises to Lord Murugar, glorifying Murugar's sacred names, holy abodes, compassion, wisdom, and divine grace toward devotees.
✨ பலன்கள்
✨ Benefits
முருகன் 108 போற்றிகளை பக்தியுடன் பாராயணம் செய்வதால் இடர்கள் நீங்கி, தைரியம், ஞானம், மன அமைதி, குடும்ப நலம் மற்றும் இறையருள் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
Singing 108 Potri of Murugar fills the heart with devotion and grants divine blessings.
📅 ஜப விவரங்கள்
📅 Chanting Guide
| விவரம்Detail | தமிழ்Value |
|---|---|
|
🗓️ சிறந்த நாள் 🗓️ Best Day |
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை,சஷ்டி, கந்த சஷ்டி, கிருத்திகை Tuesday, Friday, Sashti |
|
⏰ சிறந்த நேரம் ⏰ Best Time |
காலை பூஜை நேரம் அல்லது மாலை நேரம் Morning or Evening |
|
🔢 ஜப எண்ணிக்கை 🔢 Chant Count |
1 முறை அல்லது 108 முறை |
🙏 முருகர் அருளால் இந்த மந்திரம் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும்.
🙏 May Murugar’s blessings be with you always.
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com