🕉️
குபேரன் 108 போற்றி
Kubera 108 Potri
குபேரன் மந்திரம்
Kuberan Mantra
📿 மந்திர வரிகள்
📿 Mantra Text
1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி
41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி
51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில் குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி
101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108. ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
🔤 Transliteration
1. Alagapuri Arase Potri
2. Aanandham Tharum Arule Potri
3. Inbavalam Alippaai Potri
4. Eedilla Perundhagaye Potri
5. Ugandhu Alikkum Unmaiye Potri
6. Ookkam Alippavane Potri
7. Eliyonukku Arulpavane Potri
8. Ezhmai Nilai Agatruvaai Potri
9. Aishwaryam Alippavane Potri
10. Onbadhu Nidhi Pettravaney Potri
11. Ongara Bhakthaney Potri
12. Karuthil Niraindhavaney Potri
13. Kanagarajaney Potri
14. Kanagarathiname Potri
15. Kaasu Maalai Anindhavaney Potri
16. Kinnarargal Thalaivaney Potri
17. Keerthi Alippavane Potri
18. Keerippillai Priyane Potri
19. Guruvara Priyane Potri
20. Gunam Tharum Kubera Potri
21. Kurai Theerkum Kubera Potri
22. Kumbathil Uraipavane Potri
23. Kundalam Anindhavaney Potri
24. Kubera Loka Nayaganey Potri
25. Kundraatha Nidhi Alippaai Potri
26. Keda Thanai Neekkiduvaai Potri
27. Ketta Varam Alippavane Potri
28. Kodi Nidhi Alippavane Potri
29. Sanga Nidhiyai Pettravaney Potri
30. Sankarar Thozhaney Potri
31. Sankadangal Theerpavane Potri
32. Samayathil Arulpavane Potri
33. Sathya Swaroopaney Potri
34. Shantha Swaroopaney Potri
35. Chithralekha Priyane Potri
36. Chithralekha Manalaney Potri
37. Sindhaiyil Uraipavane Potri
38. Sindhipporkku Arulpavane Potri
39. Seekiram Dhanam Alippaai Potri
40. Siva Poojai Priyane Potri
41. Siva Bhaktha Nayaganey Potri
42. Siva Maha Bhakthaney Potri
43. Sundarar Priyane Potri
44. Sundara Nayaganey Potri
45. Soorpanaga Sagodharaney Potri
46. Senthamarai Priyane Potri
47. Selva Valam Alippavane Potri
48. Semmaiyana Vaazhvalippaai Potri
49. Sorna Valam Alippavane Potri
50. Sokkanathar Priyane Potri
… (continues same pattern up to 108)
📖 பொருள்
📖 Meaning
அளகாபுரியின் அரசனாகிய குபேரனைப் புகழ்ந்து பாடும் 108 போற்றி ஸ்துதி. செல்வம், ஐஸ்வர்யம், பொருளாதார வளம் மற்றும் குடும்ப நலன் வேண்டி பக்தியுடன் பாராயணம் செய்யப்படுகிறது.
A traditional Tamil hymn of 108 praises glorifying Lord Kubera, the king of Alakapuri and the divine treasurer of wealth. Devotees chant this to receive prosperity, financial stability, and divine blessings.
✨ பலன்கள்
✨ Benefits
செல்வ வளம் பெருகும், பொருளாதார நிலைமை மேம்படும், கடன் சுமை குறையும், தொழில் வளர்ச்சி ஏற்படும், குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கும்.
Reciting Kubera's 108 Potri removes poverty, brings abundance, wealth and Lord Kubera's divine blessings.
📅 ஜப விவரங்கள்
📅 Chanting Guide
| விவரம்Detail | தமிழ்Value |
|---|---|
|
🗓️ சிறந்த நாள் 🗓️ Best Day |
வெள்ளிக்கிழமை, தீபாவளி, அக்ஷய திருதியை, பவுர்ணமி Thursday, Pournami |
|
⏰ சிறந்த நேரம் ⏰ Best Time |
மாலை பூஜை நேரம் அல்லது லக்ஷ்மி குபேர பூஜை நேரம் Morning 6 AM to 7 AM |
|
🔢 ஜப எண்ணிக்கை 🔢 Chant Count |
1 தடவை அல்லது 3 தடவை பக்தியுடன் |
🙏 குபேரன் அருளால் இந்த மந்திரம் உங்கள் வாழ்வில் நன்மை பயக்கட்டும்.
🙏 May Kuberan’s blessings be with you always.
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com