அழகென்ற சொல்லுக்கு முருகா | Azhagendra sollukku Muruga | முருகர் நாம ஜபம் Lyrics Tamil


நாம ஜபம் | முருகர் பாடல்
Nama Japa | Murugar Song

அழகென்ற சொல்லுக்கு முருகா
Azhagendra sollukku Muruga


அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
அரகரா சண்முகா முருகா
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா

விவரம்Detail தமிழ்English
🙏 தெய்வம்🙏 Deity முருகர்Murugar
🎵 வகை🎵 Category நாம ஜபம்Nama Japa

📱 முழு பாடல் தொகுப்பிற்கு ஆப் டவுன்லோட் செய்யுங்கள்!
📱 Download App for Full Song Collection!


ஆப் டவுன்லோட் செய்க →
Download App →

🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com

இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.

🌐 www.tamilstarcalendar.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *