ஆதி பராசக்தி பாடல் | Adhi Parasakthi Paadal | ஆதி பராசக்தி பஜனை Lyrics Tamil

பஜனை | ஆதி பராசக்தி பாடல்
Bhajan | Adhi Parasakthi Song

ஆதி பராசக்தி பாடல்
Adhi Parasakthi Paadal


அகணித தாரா கணங்களின் நடுவே ஆதிபராசக்தி ஆடுகின்றாள்
சகலசரா சரத்தும் தங்க சிலம்பொலிக்க ஜெகதீஸ்வரியவள் ஆடுகின்றாள்

அயன் என வருவாள் அனைத்தையும் படைப்பாள்
ஹரிஎன அழைப்பாள் அரண்என அழிப்பாள்
அழிவில் இருந்தும் ஜீவன் பிறந்திடச் செய்பவளாம்
அகிலாண்டேஸ்வரி ஆடுகின்றாள்

அகிலம் முழுவதும் உள்ள ஆருயிரினங்களும்
ஆழப் பெருங்கடலில் வாழுயிரினங்களும்
அன்றன்றுணவு கொள்ள அத்தனைக்கும் தந்தருளி
அன்னபூர்ணேஸ்வரி ஆடுகின்றாள்

கனக கமலம் தன்னில் கனிந்த சிவப் பொருளைக்
கலந்து பேரின்பம் காட்டும் கனல் வடிவானவளாம்
நானற்ற நல்லோர்க்கெல்லாம் நானிதோ என்று தோன்றும்
ஞான பரமேஸ்வரி ஆடுகின்றாள்

இதயவீணை எழும் இன்னிசை அவளே
இருளை அகற்றும் தீப ஜோதியும் அவளே
நாற்பத்து மூன்று கோண நாகமணி மண்டபத்தில்
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ஆடுகின்றாள்

அழைக்கும்முன் வருவாள் அடைக்கலம் அளிப்பாள்
அன்பினுக் காட்படுவாள் ஆனந்த கல்யாணிஅவள்
அருட்கவி மாலைபாடும் அகத்தியன் அகத்திலே
அமுத சுந்தரேஸ்வரி ஆடுகின்றாள்
ஆனந்த நாடகம் ஆடுகின்றாள்
அகஸ்திய ஸித்தேஸ்வரி ஆடுகின்றாள்

விவரம்Detail தமிழ்English
🙏 தெய்வம்🙏 Deity ஆதி பராசக்திAdhi Parasakthi
🎵 வகை🎵 Category பஜனைBhajan

📱 முழு பாடல் தொகுப்பிற்கு ஆப் டவுன்லோட் செய்யுங்கள்!
📱 Download App for Full Song Collection!


ஆப் டவுன்லோட் செய்க →
Download App →

🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com

இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.

🌐 www.tamilstarcalendar.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *