பஜனை | காமாட்சி அம்மன் பாடல்
Bhajan | Kamakshi Amman Song
ஜெய ஜெய ஜெய சக்தி
Jaya Jaya Jaya Sakthi
ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ
ஜெய ஜெய ஜெய சக்தி ஜெய ஜெய ஜெய என பாடி பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதியைத் தா (ஓம் ஸ்ரீ)
திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க
தேவை எல்லாம் அடைய – (அம்மம்மா)
பக்தி பெருகிட பாடி உருகிட பணிப்பாய் அன்பில் எமை (ஓம் ஸ்ரீ)
இரண்டுகள் போக மூன்றுகள் கலக்க ஈஸ்வரி வரம் அருள்வாய் – (அம்மம்மா)
கரம் குவித்தோம் இனி காலை விடோமம்மா கருணையுடன் அணைப்பாய் (ஓம் ஸ்ரீ)
காசினில் எங்கும் வேற்றுமை போக கருத்தினில் அன்பருள்வாய் – (அம்மம்மா)
தேஜஸுடன் வாழ காட்டி காட்சி தேவி அடைக்கலமே – அம்மா
தேவி அடைக்கலமே (ஓம் ஸ்ரீ)
நமஸ்காரம் இருவினை கரத்தினில் ஞான நல்லொளி தீபம் வைத்து – (ஞான)
நமஸ்காரம் செய்து ஹாரத்தி எடுத்தோம் ஞாலத்துக்கமைதியைத் தா (ஓம் ஸ்ரீ)
| விவரம்Detail | தமிழ்English |
|---|---|
| 🙏 தெய்வம்🙏 Deity | காமாட்சி அம்மன்Kamakshi Amman |
| 🎵 வகை🎵 Category | பஜனைBhajan |
📱 முழு பாடல் தொகுப்பிற்கு ஆப் டவுன்லோட் செய்யுங்கள்!
📱 Download App for Full Song Collection!
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com