⭐
பஜனை | விநாயகர் பாடல்
Bhajan | Vinayagar Song
கணபதி அப்பனே சரணம்
Ganapathi Appane Saranam
கணேச சரணம் சரணம் கணேசா
கணேச சரணம் சரணம் கணேசா
அகந்தையை அழித்திடும் சரணம் கணேசா
அன்பின் உறைவிடம் சரணம் கணேசா
கருணையின் வடிவே சரணம் கணேசா
கதியென தொழுதோம் சரணம் கணேசா
ஈஸ்வர தனயா சரணம் கணேசா
ஈஸ்வரி பாலா சரணம் கணேசா
சண்முக சோதரா சரணம் கணேசா
சாஸ்தா சோதரா சரணம் கணேசா
கஜமுகன் நீயே சரணம் கணேசா
கதியெனக் கருள்வாய் சரணம் கணேசா
முதல்வனும் நீயே சரணம் கணேசா
முனிதொழும் தேவா சரணம் கணேசா
மூஷிக வாகனா சரணம் கணேசா
மோதக ஹஸ்தா சரணம் கணேசா
கணேச சரணம் சரணம் கணேசா
கணேச சரணம் சரணம் கணேசா…
சரணம் சரணம் சரணம் கணேசா
சகலதும் நீ சரணம் கணேசா
கணேச சரணம் சரணம் கணேசா
கணேச சரணம் சரணம் கணேசா…
| விவரம்Detail | தமிழ்English |
|---|---|
| 🙏 தெய்வம்🙏 Deity | விநாயகர்Vinayagar |
| 🎵 வகை🎵 Category | பஜனைBhajan |
📱 முழு பாடல் தொகுப்பிற்கு ஆப் டவுன்லோட் செய்யுங்கள்!
📱 Download App for Full Song Collection!
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com